அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ஏரிகள், பூங்காக்கள், கல்லூரி மற்றும் வீடுகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறோம். இதற்கு தேவையான மரக்கன்றுகளை உற்பத்தி செய்தும் வருகிறோம்.
மரக்கன்று நடுவதோடு அல்லாமல், தொடர்ந்து வைக்கப்பட்ட இடம், பராமரிக்கப்படும் விதம், பராமரிக்கும் நபர்களை தொடர்ந்து கவனித்து வருகிறோம். தேவை உள்ள இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, வளர்ப்பு பைகளில் வளர்த்து வருகிறோம். மண், உரம், வளர்ப்புப்பை பொருட்களை கொண்டு உருவாக்கப்படுகிறது. 10,000 மரக்கன்றுகள் இதுவரை உள்ளது.
மண்வளம் மற்றும் நீர் வளம் மேம்படுத்த குளக்கரை மற்றும் ஏரிக்கரை பகுதிகளில் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுடன் இணைந்து பனை விதைகள் நடவு செய்யப்பட்டு வருகின்றது.
வளர்ந்து வரும் இளம் சமுதாயமான பள்ளி மாணவர்களுக்கு பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை எடுத்து கூறும் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து செய்து வருகிறோம்.
தனி நபர்களின் பெயர்களில் மரக்கன்றுகளை நட்டு, இந்த மரங்களின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியம் குறித்த வழக்கமான புதுப்பிப்புகளை வழங்குவதன் மூலம் சிறப்பு நிகழ்வுகளை நாங்கள் கொண்டாடுகிறோம்.
அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள பழைய மரங்களை மீண்டும் நடுதல், அவற்றின் பாதுகாப்பு மற்றும் தொடர்ச்சியை உறுதி செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு பங்களிப்பு செய்வதிலும் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்